FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 08, 2015, 09:28:19 PM

Title: ~ முகத்தில் பருக்களா ~
Post by: MysteRy on November 08, 2015, 09:28:19 PM
முகத்தில் பருக்களா

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/12195783_1509442469353223_2750327639691576550_n.jpg?oh=4be9409d2167d96adda7c4c2ef98f1d5&oe=56BE6E62&__gda__=1454522888_6a1f7c3d9bfc76703184fbfc6914d80f)

பொதுவாக சமையல் அறையில் பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணைய உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இது மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையதாக இருக்கிறது.
வலி நிவாரணி, கிருமிநாசினி, குடற்புண், பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கின்றது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது, வலிப்பை குறைக்கின்றது, வைரஸ் கிருமிகளை எதிர்க்கின்றது, நுரையீரல் அடைப்பைப் போக்கவல்லது. மேலும் இதன் மருத்துவ தன்மை பற்றி பார்க்கலாம்.
* பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பப்பை வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
* கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.
* கருஞ்சீரகத்தைக் வெந்நீரில் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
* கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்து. சொரி, சிரங்கு, நாய்க்கடி, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணி.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோர் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.