FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 07, 2015, 08:14:36 PM

Title: ~ ரசகுல்லா தீபாவளி இனிப்பு வகைகள் ~
Post by: MysteRy on November 07, 2015, 08:14:36 PM
ரசகுல்லா தீபாவளி இனிப்பு வகைகள்

(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12191542_1509649065999230_3287809070259836681_n.jpg?oh=900edad7d02dab7b0fdf41a08b117282&oe=56B4AAA4)



நீங்கள் தீபாவளிக்கு இதைப் போல மேலும் நிறைய இனிப்பு செய்ய வேண்டும் என்றால், இதை முய‌ற்சி செய்யுங்கள். ரப்ரி குலாப் ஜாமூன், பன்னீர் கீர், ஷாஹி துக்ரா, பால் பணியாரம், பால் கொழுக்கட்டை.
பெங்காலி ரசகுல்லா ரெசிபி:
பெங்காலி ரசகுல்லா ரெசிபி
தயாரிப்பு நேரம்: 30 நிமிடங்கள்
சமையல் நேரம்: 30 நிமிடங்கள்
12 முதல் 14 ரசகுல்லா செய்யலாம்
தேவையான பொருட்கள்:
பால்: 2 கப்
தண்ணீர்: 1 மற்றும் 3/4 கப்
சர்க்கரை: 1 கப்
எலுமிச்சை சாறு: 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை அல்லது ரோஜா எசன்ஸ் ஒரு சில துளிகள்

செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து பால் திரியும் வரை கலக்கவும்.
2. மீதமுள்ள எலுமிச்சை சாறு முழுவதையும் சேர்த்து நன்கு கிளறவும். பால் நன்கு திரிந்து தயிர் போல தனியாக வரும் வரை கிளறி விடவும்.
3. அடுப்பை அணைத்து விட்டு ஒரு சீஸ் துணியால் இந்த பன்னீரை வடிகட்டிக் கொள்ளவும்.
4. இந்த பன்னீரை தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும், எழுமிச்சை சாறின் புளிப்பு தன்மை முற்றிலும் போவதற்காக.
5. துணியின் முனைகளை ஒன்றாக சேர்த்து நன்கு இறுக்கிக் கட்டிக் கொள்ளவும். மீதமுள்ள நீர் முற்றிலும் வடிவதற்கு. இந்த துணியை 30 நிமிடங்கள் தண்ணீர் குழாயின் கம்பியில் தொங்க விடவும்.
6. இந்த பன்னீரை மென்மையாக பதமாக பிசையவும். இங்கே பன்னீரை பதமாக பிசைவது மிகவும் முக்கிக்யம். குறைந்தது 10 நிமிடமாவது பன்னீரை பதமாக பிசைய வேண்டும்.
7. இந்த பன்னீர் மாவை சம அளவுள்ள‌ சிறிய பகுதிகளாக பிரித்து கொண்டு மென்மையான உருண்டையாக ஒரே மாதிரி உருட்டிக் கொள்ளவும்.
8. ஒரு பரந்த பாத்திரத்தில், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். சர்க்கரை கரையும் வரை காத்திருக்கவும்.
9. இப்போது மிதமான தீயில் வெப்பத்தை வைத்து, கவனமாக ரசகுல்லாவை (செய்த உருண்டைகளை) ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
10. இதை மூடி வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூட்டில் வைகக்வும், அவ்வப்போது திறந்து பார்த்துக் கொள்ளவும்.
11. இப்போது அடுப்பை முழுவதுமாக அணைத்து விட்டு நன்கு ஆற விடவும்.
12.இதை குளிர்பதனப் பெட்டியில் வைத்து சில்லென பரிமாறவும்