FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on November 05, 2015, 08:46:09 PM

Title: ~ பாசிப்பருப்பு முறுக்கு ~
Post by: MysteRy on November 05, 2015, 08:46:09 PM
பாசிப்பருப்பு முறுக்கு

தேவைப்படும் நேரம்: 35 நிமிடங்கள்.  12 முறுக்குகள் கிடைக்கும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-n-TjWdCpC-M%2FVjnFv7agXLI%2FAAAAAAAAPrk%2FyBuIyq48Kek%2Fs1600%2Fpasiparuppu.jpg&hash=5789c0d716ba6de7d0e11c878c3c45c78fa1c5b3)

தேவையானவை:

அரிசி மாவு - 1 கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - 1 டீஸ்பூன்
 காய்ச்சிய சூடான எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 எள் - 2 சிட்டிகை
 சீீரகம் - 2 சிட்டிகை
 எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை வாணலியில் எண்ணெய் விடாமல் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் சேர்த்து கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்க்கவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான முறுக்கு மாவாகப் பிசையவும். 3 கண் உள்ள தேன்குழல் அச்சில் மாவை விட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில், பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுத்தால், வாசனையான மொறு மொறு பாசிப்பருப்பு முறுக்கு தயார்.

குறிப்பு:

இதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.