FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 03, 2015, 02:11:32 PM

Title: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -13
Post by: aasaiajiith on November 03, 2015, 02:11:32 PM
அமைதியாய் அருகமர்ந்து
இச்சையாய் உச்சி நுகர்ந்து
களையாதபடி என் தலைவருடி
தலையாட்டி நீர் வழங்கிய
அவ்வொற்றை சம்மதத்திற்கு
இதோ கொட்டிவிடுகின்றேன்
என் மனதின் கற்றை ஆசைகளை ....

எனக்கு முன் எழுந்து
என் முழிப்புக்காக தலைமாட்டினில்
நீயாக தயாரித்த தரமான தேநீருடன்
அருகமர்ந்து காத்திருக்கும் நீ ......

நன்றி மறந்து அதுவரை கொடுத்த
அணைப்பினை விருட்டென விடுத்து
விட்டு விலகியோடிடவிழையும்
போர்வைக்கு விடைக்கொடுத்து பின்
தரமாற்றுப்போர்வையாயுன் அணைப்பு .....

மோகச்சூட்டின் வேகம்காட்டாது
அதிமித இதமோடு பகிர்ந்துவந்த
தேகப்பரிமாற்றம் தாண்டி

சத்தமில்லா சுத்தமுத்தமதை
சித்தமாய் நித்தம் பகிர்ந்துவந்த
முத்தப்பரிமாற்றம் தாண்டி

முகத்தின்மீது முகம் வைத்து
என் நாசிக்கு நேராய் நின் நாசி பதித்து
காதல் வாசமாய்
நம் சுவாசம் பரிமாற்றிக்கொள்வோமென
காதில் காதலாய் நீ ஆசை பேச
என்னில் பாசை மௌனமாகிவிடுகின்றது .
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -13
Post by: JoKe GuY on November 03, 2015, 08:29:29 PM
அருமை வளரட்டும் உங்களின் படைப்புகள் .வாழ்த்துக்கள்
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -13
Post by: aasaiajiith on November 04, 2015, 12:10:50 PM
இந்த தளத்தினில் என் பதிப்புக்கும் கருத்தா ??
அடடே , இது ஒரு நல்ல மலர்ச்சி ...


காலம் கடந்து வாழும்
பெரும் புகழ் வழங்கியமைக்கும்
வழி வழியாய்
வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -13
Post by: Maran on November 04, 2015, 01:56:31 PM


அழகான கவிதை வரிகளை கிறுக்கல்கள் என தலைப்பு கூறி விட்டீர்கள் நண்பா...
புதுக்கவிதைகளை, மரபுகவிஞர்கள் கிறுக்கல்கள் என்று செல்லமாக அழைப்பதுண்டு நான் அப்படி எடுத்துக்கொள்கிறேன்.


குறுந்தொகை, திருக்குறள் போன்ற நூல்களில் காமம் காதலை மேற்கோள் காட்டும்.

மிக அழகான காதல் கவிதை




காதலில் காதலியின் கொஞ்சி கொஞ்சி பேசும் மழலை பேச்சுக்கள் முதிர்ச்சி அடையும் பொழுது, உண்மையில் பாசை மௌனமாகிவிடுகின்றது


Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -13
Post by: aasaiajiith on November 04, 2015, 04:48:41 PM

வடகிழக்கு பருவமழையோ , தென்மேற்கு பருவ மழையோ
தகவலில்லை .இதோ என் பதிப்பிலும் இன்று கருத்து மழை ...

மனமார்ந்த நன்றி .....


காலம் கடந்து வாழும்
பெரும் புகழ் வழங்கியமைக்கும்
வழி வழியாய்
வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -13
Post by: SweeTie on November 05, 2015, 08:12:15 PM
உங்கள் சிதறல்கள்  அருமை அருமை.    வாழ்த்துக்கள்
Title: Re: என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் -13
Post by: aasaiajiith on November 07, 2015, 10:52:19 AM
சிதறல்கள் அருமை ...

ஏனோ ??  இவ்வா(ர்)ழ்த்தை கடந்ததும் அப்படியொரு உதறல்கள் .


காலம் கடந்து வாழும்
பெரும் புகழ் வழங்கியமைக்கும்
வழி வழியாய்
வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!