FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on November 02, 2015, 09:08:49 AM
-
காலையில் பனித்துளிபோல் உருகுகிறாய்
மாலையில் தென்றலாய் தீண்டுகிறாய்
நடுநிசியில் புயல்போல் புரட்டுகிறாய்
வானவில்போல் மாயங்கள் காட்டுகிறாய்
மேகத்தில் ஒளிந்திருக்கும் நிலாபோல
சில்மிசங்கள் செய்து விளையாடுகிறாய்
தாகத்தில் பரிதவிக்கும் புறாபோல்
வேஷங்கள் கூடவே போடுகிறாய்
என் மனதோடு தினம் பேசுகிறாய்
தீராத காதலில் எனை வாட்டுகிறாய்
பூவிலே கருவண்டாய் சுத்துகிறாய்
தேன் சிந்தும் மதுக்கின்ணமாய்
உன் பேச்சிலே நான் கரைவதும்
என் மூச்சிலே நீ உறைவதும்
நம் இதயங்கள் பின்னிப் பிணைவதும்
யார்தான் அறிவரோ ?????
-
காதல் கவிதைகளில் Phd வாங்கி விட்டீர்களா என்ன ? அருமை வளரட்டும் உங்களின் கவிதை பூக்கள்.
-
மிக அழகான உவமைகளை பயன்படுத்தி மிக நேர்த்தியாக கவிதையில் மனதோடு பேசி காதலை உணர்த்தி உள்ளீர்கள் தோழி...
உண்மையில் காதலை இவ்வளவு அழகாக உள்வாங்கி புரிந்துணர காதலை தெரிவித்து இருக்க முடியாது.
மேகத்தில் ஒளிந்திருக்கும் நிலாபோல
சில்மிசங்கள் செய்து விளையாடுகிறாய்
தாகத்தில் பரிதவிக்கும் புறாபோல்
வேஷங்கள் கூடவே போடுகிறாய்
மிக அழகான குறிப்பிடத்தகுந்த உவமை வரிகள்...
உங்கள் கவித் திறமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...
-
:Pshare pannunga sweetie na ariven hehe....