FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on November 02, 2015, 12:15:14 AM

Title: ~ திருமணமான பெண்கள் #மெட்டி (கணையாழி) அணிவது ஏன்..?? ~
Post by: MysteRy on November 02, 2015, 12:15:14 AM
திருமணமான பெண்கள் #மெட்டி (கணையாழி) அணிவது ஏன்..??

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12196178_1507579789539491_8153921278326693073_n.jpg?oh=7123b4646d5a93b64f84874208dae8dd&oe=56CD5A67)

திருமணமான பெண்கள்தான் மெட்டி அணிய வேண்டும் இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள தமிழனின் அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம்.

பெரும்பாலான திருமணமான தமிழ் பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.
மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று தமிழ் வேதங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது…!!