FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 26, 2015, 07:31:22 PM

Title: ~ பூண்டு வெந்தயக் குழம்பு ~
Post by: MysteRy on October 26, 2015, 07:31:22 PM
பூண்டு வெந்தயக் குழம்பு

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xlf1/v/t1.0-9/12032965_1506029979694472_7426491056428467242_n.jpg?oh=c3e4291ca7cc3376aa3f781af33e8a5f&oe=568ABFBC&__gda__=1455933735_fdd3224685902c3723d4dce3d403e39c)

தேவையான பொருட்கள் :

சிறிய வெங்காயம் – 20
பூண்டு – 6 பற்கள்
மிளகாய் வற்றல் – 5
சீரகம் – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 2 தேக்கரண்டி
தனியா – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி
கடுகு – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.

• வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.

• பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.

• மிளகாய் வற்றல், சீரகம், தனியா ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.

• புளியை சிறிது நீரில் ஊற வைத்து, பின் அதனைக் கரைத்து அதனுடன் அரைத்த மசாலாவினையும், மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் பொடித்த வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.

• அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டினைப் போட்டு வதக்கி மசாலா கரைத்த புளித் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

• குழம்பு நன்கு கொதித்து வற்றியவுடன் சிறு தீயில் சிறிது நேரம் வைத்திருந்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.