FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 25, 2015, 07:24:40 PM
-
பளிங்கு பாத்திரங்கள் பள பளப்பாய் மின்ன...பாதுகாப்பாக பராமரிக்க சில டிப்ஸ்
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/12122905_1505740536390083_1692397322226637845_n.jpg?oh=bfe33ae2d939f58873f19ad5ed5b830c&oe=56C816D9&__gda__=1454806105_21d52aa00b16d1a1d2424435c30d6a84)
பளிங்கு பாத்திரங்கள் பள பளப்பாய் மின்ன...
சமையலறையில் கண்ணாடி, செராமிக் போன்றவைகளால் ஆன பொருட்களை பயன்படுத்துவது அழகாக இருந்தாலும், அதனை பளிச் என்ற தோற்றத்தோடு பராமரிப்பது சிரமமான காரியம்.
இவற்றை பாதுகாப்பாக பராமரிக்க சில டிப்ஸ்
கீறல்களை தவிர்க்கலாம்
கண்ணாடி, செராமிக் பாத்திரங்களை துலக்கி கழுவும் போது கம்பி போன்ற பொருட்களை வைத்து துலக்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை கீறலை ஏற்படுத்தும். ஸ்க்ரப் களை உபயோகப்படுத்து நீண்டநாட்களுக்கு புதிது போல தோற்றத்தை தரும்.
கண்ணாடி பொருட்களை கழுவும் போது, கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை கழட்டி விடலாம். ஏனெனில் கண்ணாடி பொருட்களில் உராய்ந்து கீறல் விழுவதை தவிர்க்கலாம்.
பளிங்கு மற்றும் கண்ணாடி பாத்திரங்களை, செய்தித் தாள்களின் மேல் கவிழ்த்து வைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் உள்ள ரசாயனங்கள் நாளடைவில் பளிங்கு பொருட்களின் பளபளப்பை மங்கச் செய்து விடும்.
கறைகளை போக்க
கண்ணாடி மற்றும் பீங்கானாலான பவுல்கள், டம்ளர்கள் போன்றவற்றில் காணப்படும் கறைகளை அகற்ற, எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கறையுள்ள இடத்தில் தேய்த்து கழுவினால் கறை அகன்று விடும்.
கண்ணாடி பொருட்களை அலம்பிய பின், கடைசியாக கழுவும் தண்ணீரில் சிறிது வினிகர் மற்றும் போராக்ஸ் பவுடர் கலந்து கழுவ வேண்டும் அப்படி செய்வதன் மூலம் பளபளப்பு அதிகமாகும்.
பூ ஜாடிகள், எண்ணெய் ஊற்றி வைக்கும் ஜாடி, தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் அதிக நாட்கள் எண்ணெய் மற்றும் தண்ணீர் வைத்திருப்பதால் கறை ஏற்படும் அதை போக்க அதில் சிறிது வினிகரை ஊற்றி, கறையின் தன்மையை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒரு நாள் இரவு வரை ஊற விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும்.
உராய்வை தடுக்க
பீங்கான் தட்டுக்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைப்பதால் உராய்ந்து கீறல் விழுகிறதா?
அடுக்கி வைக்கும் போது, ஒவ்வொரு தட்டை அடுக்கிய பின்னும், ஒரு துணியை போட்டு பின் அதன் மேல் மற்றொரு தட்டு என அடுக்கலாம்.
இதனால் தட்டுக்களுக்கு இடையே உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
கூர்மையான பொருட்கள்
கண்ணாடி பாட்டில்களில் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்க பாட்டிலில் சிறிது கடுகு போட்டு வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் ஊறவைக்கவும் இதனால் துர்நாற்றம் காணமல் போய்விடும்.
கடுகுக்குப் பதிலாக உப்பை போட்டு ஊறவைத்தும் கழுவலாம்.
கண்ணாடியினால் ஆன பொருட்களை சூடான சமையங்களில் தண்ணீரில் போடுவது விரிசலை உண்டாக்கும்.
மேலும் கூர்மையான கத்தி போன்ற பொருட்களைக் கொண்டு கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நான்ஸ்டிக் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களையே கண்ணாடி, செராமிக் பொருட்களையே பயன்படுத்தவேண்டும்.
மஞ்சள் கறைகள் நீங்கும்
வாஷ் பேசினில் மஞ்சள் கறை படிந்திருந்தால், அவற்றின் மீது வினிகரை தெளித்து, சிறிது நேரம் தண்ணீர் ஊற்றி தேய்த்து கழுவினால் கறை காணாமல் போய்விடும்.