FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on January 01, 2012, 12:44:27 PM

Title: முதிர்கன்னி!
Post by: Yousuf on January 01, 2012, 12:44:27 PM
வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்வானம்போல்,,
வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்வாலிபம்!!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிறப்பிக்கொண்டு
வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!

உடல் இருக்கும் வரனுக்கு
உள்ளம் ஊனமா?
பழமுதிர் சோலையாகவேண்டிய
கன்னியற்க்கு
பாலைவன வாழ்க்கையா?

இந்த முதிர்-கன்னிகளின்
தேடலுக்கு முடிவென்ன?
முதிர் என்னும் வரதட்சணையை
எதிர்த்து நில்லுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கணவர் எனும் உறவுக்கு
கெளரவம் சேருங்கள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்