FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 25, 2015, 07:10:56 PM
-
மாங்கா சாதம்
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/12112375_1505739796390157_4812146640067069028_n.jpg?oh=916f77ee7e8ff91dc080a0325bd18426&oe=56C40657&__gda__=1451532654_666b4fea2895b291c0cb26ede0b068ff)
தேவையானவை:
மாங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
சாதம் - 1 கப்
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - சிறிது
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2
மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, துருவிய இஞ்சி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மாங்காய், உப்பு சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போய் வேகும் வரை வதக்கவும். வெந்த சாதத்தில் கலவையை சேர்த்து கிளறினால் மாங்காய் சாதம் ரெடி