FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Yousuf on January 01, 2012, 11:04:51 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-QtRSwx4fPT4%2FTshyoHQbM1I%2FAAAAAAAAGbI%2F60kOO_OrOmw%2Fs200%2FUntitled-1.jpg&hash=48c816e68ee91afaeb76c4fe74cb5561ce22296b)
NOV 20: சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலையில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரை அணுகி குறிகேட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) என்பவர் கடந்த மாதம் 25ம்தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
எஸ்பி விஜயேந்திரபிதாரி உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கள் 15 வாகனங்களில் ரோந்து சுற்றி குற்றவாளி களை தேடிவருகிறார்கள். வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். 25நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில் தனிப் படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழஈரால் பகுதி யில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல் லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளை யில் குற்றவாளி சிக்கு வானா என்று கேட்டனர். மேலும் காவலாளியை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிந்திக்கவும்: ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான். ஏதோ இந்தியாவுக்கு கள்ள துப்பாகிகளை அறிமுகபடுத்தி விட்டவன் ஈழத்தமிழன் என்பது போல் ஒரு மாயை ஏற்படுத்தி இந்த பேங்க் காவலாளி கொலையிலும் அவர்களை துன்புறுத்துவது காவல்துறை கயவர்களின் இயலாமையையே காட்டுகிறது. புருலியா ஆயுத மழையை முதல் முபையில் தினம்தோறும் நடக்கும் துப்பாக்கி சண்டை வரை, கள்ளத்துப்பாக்கி மார்கட்களும், துப்பாக்கிகளும் வருவதும் அனைத்தும் வடநாட்டில் இருந்தே இப்படி இருக்க தமிழன்தான் இவர்களுக்கு இளிச்சவாயன்.
கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது. இந்திய காவல்துறை கயவர்கள் லஞ்சம் வாங்குவதிலும், அப்பாவிகளை குற்றவாளிகள் என்று சொல்லி சிறையில் தள்ளுவதிலும் கில்லாடிகள். லஞ்சம் வாங்குவது எப்படி, சக காவல்துறை பெண் ஊழியர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது எப்படி, குடித்து கூத்தாடுவது எப்படி என்பதை கற்று கொள்ள இந்திய காவல்துறையினரிடம் பயிற்சி எடுக்க வேண்டும். இவர்கள்தான் உலகுக்கு முன்னோடிகள்.
இவர்கள் ஒன்றும் முறைப்படி துப்பு துலக்கி கண்டுபிடிப்பது எல்லாம் இல்லை, யார் மேல் சந்தேகமோ அவர்களை உள்ளே கொண்டுவந்து அடித்து துன்புறுத்தி அதன் மூலம் கண்டுபிடிப்பது, அப்படியே கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் பழைய குற்றவாளிகள் மீது திரும்ப வழக்கை போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் இவர்கள் வழக்கம். குற்றம் செய்தவன் ஏழையாக இருந்தால் அவனை நோக்கி சட்டம் தன் கடமையை திறம்பட செய்யும், அவனே பணக்காரனாக இருந்தால் சட்டம் சல்யூட் போட்டு வளைந்து கொடுக்கும். இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும்.
இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது என்றே சொல்லவேண்டும். ஒரு சிலரை தவிர.இத்துறையில் நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது சதவீதம் ரவுடிகளும், கிரிமினல்களும், பயன்கரவாதிகலுமே நிறைந்துள்ளனர். இத்துறையை ஒழித்து முன்புபோல் கிராம காவல்படையை அந்த அந்த கிராமத்து மக்களே நியமித்தால் அந்த படை இவர்களை விட சிறப்பாக பணிபுரியும்.