தீபாவளி ...
சற்றே திரும்பி பார்க்கிறேன்
என் பாலிய பருவத்தை.
பசுமையான மலை
செடி கொடிகளுக்கு நடுவே
பூத்து குலுங்கும்
நந்தவனமாக
என் பாட்டனின்
கிராமத்து வாசனையுடன்
நான் கொண்டாடிய
தீபாவளியை ....!
பட்டாசு சத்தம் காதை
கிழித்தாலும் அனைவருமே
எழுந்தாலும் எண்ணெய்
குளியலுக்கு பயந்து
உறங்குவதாய்
நடித்ததை நினைக்கையில்
சிரிப்பே பரிசாக ...
நினைப்பே இனிப்பாக ...!
வகைவகையாய் பட்சணம்
படைத்து வழிபாடு முடித்து
அனைவரும் ஒன்றாக
அமர்ந்து உண்ணும் போது
நான் மட்டும் அனைவரிடமும்
ஒரு வாய் வாங்கி
வயிறு நிறைத்தது
நினைக்கையில்
இன்றும் பசி இல்லை ...!
எல்லாம் முடிந்து
பட்டாசு வெடிக்க
களம் இறங்கினால்
எனக்கு முன் பயம்
என்னை தொற்ற
பட்டாசையும் ஊதுபத்தியையும்
ஒன்றாக உடன் பிறப்பு
மேல் எறிய அவன் அலறிய அலறல்
இன்றும் நினைக்கையில்
பயமே மிரட்சியாக ...!
அறியாத வயதில் அனைத்தும்
ஆனந்தமே இன்று அறியும் போது
ஓசோனில் ஓட்டை
வறுமையில் மக்கள்
அன்று இருந்த மகிழ்ச்சி
இன்று இல்லை
இனியும் வராது?
ஏன் ?
முயற்சி இருந்தால்
மகிழ்ச்சி நிச்சயம் ...!
இருப்பவர்களுக்கே
இது தீபாவளி
இயலாதவர்களுக்கு இது
சரியான திருகுவலி .
விதியின் மேல்
பழி போட்டு தப்பித்துகொள்ள
நாம் மூடர்கள் அல்ல
முன்பின் தெரியாதவனுக்கு
நீ அள்ளி கொடுக்க வேண்டாம்
கொஞ்சம் கிள்ளி கொடு போதும் ...!
எப்படியும் என் சொல்
கேட்க போவதில்லை
எனக்காய் ஒரு வேண்டுகோள்
எப்படியும் பட்டாசை
வாங்கி குவித்து ஓசோனில் ஓட்டையை
பெருசாக்க முடிவாயிற்று .
காசை கரியாக்குவதில்
கூட சிலரை வாழ வைக்கலாம்
சீனர்களின் பட்டாசை வாங்காமல்
சிவகாசி பட்டாசை வாங்கி
அவர்களை வாழ வையுங்கள்
தித்திக்கும் தீபாவளி ...!