FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 19, 2015, 09:30:09 PM
-
அணைத்து பெண்களும் படிக்க வேண்டிய ஒரு msg....
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12096354_1504880046476132_2088240457166274971_n.jpg?oh=040f4e5b76658b5a08e5d53affbc005b&oe=56CCFB59)
என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப்போனீங்களே என்னாச்சு?"
"அதெல்லாம் சேர்த்தாச்சுடி"
"அப்பாடா இனிமேதான் எனக்கு நிம்மதி. சும்மா தொணதொணன்னு உசுரை எடுத்துச்சு கிழவி"
"அதான் சேர்த்தாச்சுல்ல. அப்புறம் ஏன் எங்காம்மாவை திட்டறே?... ஆங்... சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்துல பேச்சுத்துணை இல்லாம எங்கம்மா மட்டும் எப்படி இருப்பாங்கன்னு யோசனையா இருந்தேன்"
"பேச்சுத்துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"
"கிடைச்சுட்டாங்க"
"அப்படியா... யாரு"
"உங்கம்மா. இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்....