FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on October 19, 2015, 09:20:56 PM

Title: ~ யார் உலகில் மிகவும் சந்தோஷமா இருக்கிறவங்க ? ~
Post by: MysteRy on October 19, 2015, 09:20:56 PM
யார் உலகில் மிகவும் சந்தோஷமா இருக்கிறவங்க ?

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12074633_1504879696476167_1126904257052785193_n.jpg?oh=e3cc13f6917691a8f4c0096561861517&oe=56D1C4A5)

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.
அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே ..கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது.

கொக்கு சொன்னது. நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது.
காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது. உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை. அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது.

உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று.

அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள்.என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் ..என்றது.
மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று. ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது.

இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்படவில்லை .. எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே ..என்றது.

தோழர்களே , இதுதான் நமது பிரச்சினையும் ...
நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம்.
நாம் எப்பவும் கடவுள் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை.அவர் கொடுத்ததை மதிப்பதும் இல்லை.

இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது.
ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை.
உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள். உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது.