FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 18, 2015, 10:31:48 PM
-
தூதுவளை மூலிகை, உணவுப் பயன்பாடு
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/12074943_1504650139832456_7359326541277185029_n.jpg?oh=9eeaa11c875d8228d28d0bb1804d06d4&oe=56959334&__gda__=1452565940_aba90295c706987b8a84a39d0630cef9)
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
மருத்துவ குணங்கள்
இருமல், சளி குறைக்க வல்லது. நரம்புத் தளர்ச்சிக்கு நல்ல மருந்து. பெண்களின் இடுப்பு வலி, கர்பப்பையின் பிரச்சனைகளை தீர்க்க வல்லது. காச நோய், நிமோனியா, ஆஸ்துமா தீர்க வல்லது. உடல் பலம் தரக்கூடியது.
மருந்தாக உட்கொள்ளும் முறை
தினமும் இரண்டு வேளை அரை தேக்கரண்டி தூதுவளை மூலிகைப் பொடியினை தேன் கலந்து உணவிற்குப்பின் சாப்பிட வேண்டும்.