FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 18, 2015, 12:36:05 AM
-
கீரைகளின் மகத்தான பயன்கள்:-
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12107091_1504649033165900_8355404866175150861_n.jpg?oh=80a546f44c1646fe082dd8584e6be2bf&oe=568D7DA7)
* வாய்ப்புண்ணையும், குடல் புண்ணையும் ஆற்றும் சக்தி மணத்தக்காளிக் கீரைக்கு உள்ளது.
* காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் வலுப்படும், ரத்தம் சுத்தப்படுத்தப்படும்.
*அரைக்கீரை அனைத்து வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. மேலும் கண் பார்வை, ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும்.
* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
* பசளைக்கீரை ஆனது மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும்.
* வெந்தியக்கீரை வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும்.
* அகத்திக்கீரை வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும்.
எல்லா கீரைகளிலும் உடலுக்கு ஏற்ற ஒரு குணம் உள்ளது.
எனவே வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது அனைவரும் கீரை சாப்பிட வேண்டும்
(குறிப்பாக வளரும் குழந்தைகள்)