FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 18, 2015, 12:31:12 AM
-
பாதாம் பூரி
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/12107129_1504472766516860_2471913569323230354_n.jpg?oh=5988e8b5601ee398fca936db7bf311a7&oe=5695B097&__gda__=1456567293_8ed3f01b71acd073e5fe6481b179ad19)
பாதாம் பூரி வித்தியாசமான இனிப்பு வகை.மிதமான இனிப்புள்ள இந்த உணவை நிறைய சாபிட்டாலும் திகட்டாது.
தேவையானவை
மைதா – 2 1/2 கப், பாதாம் – 1 கப், சக்கரை – 31/2 கப், அரிசி மாவு – 1 1/4 கப், பால் – 1 கப், ஏலக்காய் – 1 ஸ்பூன் , நெய் – 1 கப், எண்ணெய் – 1 கப், தண்ணீர் – 1 கப்
செய்முறை :
பாதாமை ஊறவைத்து, தோலுரித்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு,மைதா, பால் மற்றும் பாதாம் விழுது ஆகியற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரோடு சக்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து பாகு தயாரித்து கொள்ளவும்.
மாவினை சிறிய பூரிகளாக திரட்டிகொள்ளவும். அனைத்து பூரியின் மீதும் நெய் தடவி ஒன்றன்மீது ஒன்றாக மூன்று பூரிகளை அடுக்கவும். இவ்வாறு மூன்று பூரிகளை ஒரு அடுக்காக தனித்தனியே அடுக்கவும்.
இந்த அடுக்களை சிறு துண்டுகளாக வெட்டி, மறுபடியும் சிறு பூரிகளாக திரட்டிக்கொள்ளவும்,இப்படி செய்தால் பூரி மூன்று அடுக்குகளாக இருக்கும்.இந்த பூரிகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பூரிகளை தயார் செய்த சக்கரை பாகில் போட்டு ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.