FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 18, 2015, 12:17:37 AM
-
முக அழகுக்கு…
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/12096612_1504470679850402_2240286467509011309_n.jpg?oh=8e69a72f48c29da6d7a1a49540d127f9&oe=56C65A4D&__gda__=1456337268_e90655130ed9e49b0ed751c569a8596b)
முக அழகும் பாதுகாப்பும் :
முகப்பருக்கள், வடுக்கள், வெண்ணிற மற்றும் கருப்பு முட்டுக்கள் முகச்சுருக்கம் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையம், தேவைக்கு அதிகமான முடி போன்றவைகள் முக அழகை கெடுத்து விடக்கூடியவை. முகத்தின் சருமத்திலுள்ள அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்றாகச் சேர்ந்து சருமத்தில் உள்ள துவாரங்களின் மூலமாக உள்ளே சென்று, அங்குள்ள நுண்கிருமிகளுடன் சேர்ந்து தோலிற்கு மேல் வருகிறது. இதனை தடுக்க அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி சருமத்தின் துவாரங்கள் அடைபடாமல், பார்த்துக் கொள்ளவேண்டும். அதிக கொழுப்புள்ள ஆகாரங்களை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாதவாறு – உணவில் பச்சை காய்கறிகள், கீரைகள், பழம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் முகப்பருக்கள், கருப்பு – வெண்ணிற மூட்டுக்கள் போன்றவற்றை தவிர்க்கலாம்.
முகச்சுருக்கம் :
வயதானதினால் ஏற்படும் முகச்சுருக்கம், ஒரு புறம் இருந்தாலும் அதிகப்படியான ஒப்பனை சாதனங்கள் உபயோகிப்பதாலும் வெயில், குளிர் போன்ற சீதோஷ்ண நிலை காரணமாகவும் மற்றும் மன இறுக்கம், மனச் சோர்வு போன்றவை முகச் சுருக்கத்தை ஏற்படுத்தி அழகை கெடுத்து விடும். சில தசைப்பயிற்சிகளாலும், மசாஜ் போன்ற வற்றாலும் முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கண்களில் கருவளையம் :
கண்களுக்கு கீழே ஏற்படும் கரு வளையம் முக அழகை கெடுப்பதுடன், வயதையும் கூட்டி காண்பிக்கும். தூக்கமின்மை கண்களில் ஒய்வின்மை, மனக் கவலை, உடல் சத்துக் குறைவு போன்ற பல காரணங்களை கூறினாலும் முக்கிய காரணம் கண்களை சுற்றியுள்ள தோலில் ஏற்படும் சுருக்கம்தான் கரு வளையத்திற்கு பிரதான காரணம்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதை தவிர்த்து கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுப்பதுடன் கருமை உண்டான பகுதியில் வெளுப்பாக்கும் க்ரீம் தடவியும், மசாஜ் செய்தும் இக்குறையை நிவர்த்தி செய்யலாம்