FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on December 31, 2011, 05:25:45 PM

Title: கைவிரல் நகங்கள் நிறமாற்றம்: இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறி!
Post by: Yousuf on December 31, 2011, 05:25:45 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.thoothuonline.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F12%2FCommonnailproblems_1-270x170.jpg&hash=ee648503911993f3002518324641153a103cd2bb)

சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.

அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.

இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.

மேலும், இரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்கவேண்டிய `பிங்க்’ நிறம் மறைந்து, வெளுத்துவிடும்.

இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள் மற்றும் இறைச்சியை இந்த பாதிப்பு உள்ளவர்கள் உணவுடன் சேர்த்துக்கொள்வது அவசியம்.

அல்லது, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு, விட்டமின் பி-12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.