FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 13, 2015, 08:59:04 PM

Title: ~ காலையில் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! ~
Post by: MysteRy on October 13, 2015, 08:59:04 PM
காலையில் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12143170_1503610053269798_7431930838250533361_n.jpg?oh=7dd66bf99761f93e27c548930eb27bca&oe=569C3F7E&__gda__=1456635011_20065798e9e077b91443e3f8308f6427)

காலையில் எழுந்தவுடன் தேநீர், காபி குடிப்பதை பழக்கமாக கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

தேநீர், காபி போன்றவை உடலுக்கு புத்துணர்ச்சியை தந்தாலும், காலை நேரத்தில் பழச்சாறுகள் குடிப்பதல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

காலையில் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ,

சத்துக்கள்:

வெள்ளைப் பூசணியில் விட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.

முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும்.

அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.

2. தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

3.வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.

4.உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

5. வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

6. சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.