FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CybeR on October 13, 2015, 08:55:37 PM
-
விவரம் அறிந்த பருவம் முதல் விரும்பி எதையும்
கேட்டு நான் விரல்
நீட்டியதில்லை எதிரியாகப் பணம்
இருந்ததினால்...!!!
கையில் வந்தவுடன்
கடந்து போகும் அத்தாள்
தேவைக்குத் தேடுகையில்
கிடைப்பதென்பது அரிதாகவே...!!!
கைப்பையில் தேடுகையில் எல்லாம் உள்ளம்
வலித்து மன்றாடும் கசங்கியேனும்
இருந்துவிடாதா?
ஒற்றைத்தாள்....!!!
அழுத பிள்ளைக்குப்
பால் வாங்கவென
அடகு வைத்த தன்மானம் இன்னும்
மீட்கப்படாமலே...!!!
தவிக்கும் உள்ளம் அடுத்தொரு பிணி
கண்டால்
மருத்துவம் பார்க்க பணத்துக்கு என்ன
செய்வதென...!!!
படியேறி யார் வீடு போனாலும்
பாசத்துக்காயென
நினைப்பதில்லை ஒருவருமே பணம் கேட்பாளோ
என்று
நினைக்கும் நிலை கொண்டேன்....!!!
உயிரில்லா இப்பணம் தான் உயிரையும்
காவு வாங்கும் என்பதினால்
எப்போதும் என் வாழ்வின் மிகப்பெரிய
எதிரியாகவே பணம் ....!!!
-
உயிரில்லா இப்பணம் தான் உயிரையும்
காவு வாங்கும் என்பதினால்
எப்போதும் என் வாழ்வின் மிகப்பெரிய
எதிரியாகவே பணம் ....!!!
அழகான, எதார்த்தமான வரிகள் நண்பரே...
ஆமாம் நண்பரே... ஒரு பொருள் நாம் பெரிதும் விரும்பி அது நமக்கு கிடைக்கவில்லையென்றால், அதை நம் மனது வெறுக்க ஆரம்பிக்கும். ஆனால், இந்த அச்சடித்த காகிதத்தை மட்டும் புறக்கணிக்கப்படவும், ஒதுக்கப்படவும் மனம் யோசிக்கிறது. நம் உயிர்நிலை அதை சார்ந்து இருப்பதாலோ என்னவோ..!!
உண்மையில் பணம் ஒரு எதிரிதான் எனக்கும்....
-
மிக அழகாக இருக்கிறது.மேலும் வளர வாழ்த்துக்கள்.பணம் நமக்கு அடிமையாக இருந்தால் நிம்மதி.
-
ஏன் எதிரியாக நினைக்குறீங்க.....நண்பனா நினைச்சு செயற்படுங்க.
எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
கவிதை அருமை. வாழத்துக்கள்.