FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 31, 2011, 02:04:56 PM

Title: ரெமோவுக்கு நன்றி
Post by: aasaiajiith on December 31, 2011, 02:04:56 PM
ஆசையின் அன்பும், ஆசையும் நிறைந்த இனிய உற்சாக வணக்கம் !
உன் பாராட்டு தகவலை படித்தேன்
மனம் உவந்தேன் , உவகையும் கொண்டேன் -இருந்தும்,
உண்மையில் உன் பாராட்டிற்கு உகந்தவனா?
உன் கூற்றின் சிறப்பிற்கு உரித்தவனா ?
உறுதி செய்கிறேன் வெகுவிரைவில் .அதுவரை
தற்காலிகமாய் உன் பாராட்டிற்கு உடன்படுகிறேன் .
உன் வாழ்த்தை சொல்லிட என்னை தேடி வாடினாயா?
உன்னை ஏமாற்றும் எண்ணத்தில் வாராமல் இருக்கவில்லை
ஏன் மாற்றம் தரகூடாதென என்றெண்ணியே
என் வரவிற்கு மறைவு கொடுத்திருந்தேன்
ஏன் மாற்றம் ? எதற்குமாற்றம் தரவேண்டும்
என கேள்வி எழும்,அது இயல்பே .
உன் வரவு ஒருவருக்கு தொந்தரவு என தெரிந்தால்
எண்ண முடிவை நீமுடிவாய் எடுத்திருப்பாய்?
என்  வரவு தொந்தரவு என்றதோடு இல்லாமல்
புது வரவு ,வீண் செலவு, என் வரவால்
தேன் வரவாய் பலர் கருதும் கவி ஒருவரின்
நல்லவரவு இடையூருடன் தடைபடுவதாய்
தொடர் வரவு தரும் தோழர் ஒருவர்
தோழமையாய் தான் கூறினார் - இருந்தும்
அத்தகவல் தாழ்மையாக தோன்றியதால்
அரட்டை அறைக்கு வாராமல் தவிர்த்துவிட்டேன்
ஆகையால் இனி தகவல் தருவதென்றால்
தனி தகவலே தொடர்ந்து தரலாம்
தொடர்பில் தொடரலாம் என
தெளிவுபட தெரிவித்துகொள்கிறேன் .
                        இப்படிக்கு
                என்றும் அன்புடன்

                  ஆசை (அஜீத் )
Title: Re: ரெமோவுக்கு நன்றி
Post by: RemO on January 02, 2012, 01:40:29 AM
Quote
உன் கூற்றின் சிறப்பிற்கு உரித்தவனா ?
உறுதி செய்கிறேன் வெகுவிரைவில் .அதுவரை
தற்காலிகமாய் உன் பாராட்டிற்கு உடன்படுகிறேன் .

So inum neraya nala kavithaikal poduvinganu namburen All the best Ajith

Quote
உன் வரவு ஒருவருக்கு தொந்தரவு என தெரிந்தால்
எண்ண முடிவை நீமுடிவாய் எடுத்திருப்பாய்?

Avangaluku thontharavu varatha maari nadanthurupen, en mela kutram ilainu puriya vatchurupen (F)
Ithu thaan nan seithurupen

Anyway ungal virupam, athil naan thalaiyida mudiyathu (F)
Title: Re: ரெமோவுக்கு நன்றி
Post by: aasaiajiith on January 02, 2012, 10:50:58 AM
நேர்த்தியான ,சாதுர்யமான முடிவு .நன்றியும்,  பாராட்டுக்களும் நீங்கள் எடுத்திருப்பேன்  என்ற நிலைபாட்டிற்கு .
ஒருவேலை சம்பந்தபட்ட நபர் நேரடியாய் தன் நிலைபாட்டை (குற்றச்சாட்டை ) வாசித்திருந்தால்
நானும் அதை தான் செய்திருப்பேன் !
    எது எப்படியோ அடுத்தவர் போல் இல்லாமல் , சுயத்தை மதிக்கும் உங்கள் நாகரீகத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியும் பாராட்டுக்கள் !