FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on October 12, 2015, 09:53:01 PM
-
மைக்ரோசாப்ட் மூடிய விண்டோஸ் போன் 8.1 செயலிகள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-i-YGNMz0LL4%2FUp3z7ZMzSEI%2FAAAAAAAAStk%2FtySR63b6Y_U%2Fs1600%2Fnew-microsoft-logo.jpg&hash=775440e200ea34648667dcae6374ae8c7276c730)
தன்னுடைய விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோரில் (Windows App Store) இதுவரை தரப்படும் சில விண்டோஸ் மொபைல் சார்ந்த செயலிகளை மைக்ரோசாப்ட் நீக்க உள்ளது.
லூமியா போன்களில் கேமரா சார்ந்த செயலிகள் இவை. இந்த செயலிகள் விண்டோஸ் போன் 8.1 சிஸ்டத்தில் செயல்படுபவை.
லூமியா ஸ்டோரி டெல்லர் (Lumia Storyteller), லூமியா பீமர் (Lumia Beamer), போட்டோ பீமர் (Photobeamer) மற்றும் லூமியா ரிபோகஸ் (Lumia Refocus) ஆகிய செயலிகள் வரும் அக்டோபர் 30க்குப் பின், விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்காது.
ஏற்கனவே, இவற்றைப் பெற்று பதிந்து இயக்குபவர்களுக்கும், இது குறித்த எந்த சப்போர்ட் பைலும் வழங்கப்பட மாட்டாது. இவை அப்டேட் செய்யப்படவும் மாட்டாது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால், மொபைல் போன்களில் இயங்கிக் கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் இவற்றை நீக்காது.
“மிகச் சிறந்த வகையில் செயல்படும் செயலிகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை நாங்கள் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்.
அதன்படி, இந்த செயலிகளுக்குப் பதிலாக விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தினையும், அதில் இயங்கும் இந்த பதிலி செயலிகளையும் தருகிறோம்” என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
லூமியாவில் இயங்கும் செயலிகள் பல விண்டோஸ் 10ல் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.