FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on October 11, 2015, 06:56:46 AM
-
கதிரவனின் தங்கக் கதிர்களைச்
சுமந்து செல்லும் கடல் அலையே - நீ
வந்து வந்து போகும்போது - என்
காதலையும் அல்லவா சுமந்து போகிறாய்
கொடுத்துவிடு என் கள்வனிடம்
காத்திருப்பான் அக்கரையில் தனிமையுடன்
உறங்காமல் என் நினைவால் சிக்குண்டு
உடல் இழைத்து பித்துப் பிடித்தவன்போல்....
எங்கிருந்தோ வந்தான் பறித்துக்கொண்டான்
என் அசைக்கவொண்ணா கல்போன்ற இதயமதை
செல்ல சிணுங்கல்களால் என்னைத் திக்குமுக்காடவைத்து
அனுமதி இன்றியே என்னுள் நுழைந்தவனே
'நான் நானாக இல்லாமல் இன்று ஆக்கிவிட்டாய்
அக்கரையில் நீ இருக்க இக்கரையில் நானிருக்க
கடல் அலையே நமக்கு உறுதுணையாய்
அங்கும் இங்கும் சென்றுவர
ஆறாத ரணமாய் உருகும் நம் உள்மனசை
யார்தான் புரிவாரோ? - வேண்டாம் என ஒதுங்கி
பாராமுகமாய் இருந்தாலும் குற்றமில்லை
தீராத நோய்க்கு சாமி வரம் கொடுதாப்போல்
நேராதா ஒரு காலம் நம் காதல் கைகூட...
-
உங்களின் கவிதை நடையில் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டீர்கள்.மேலும் உங்களின் படைப்பினை எதிர்பார்க்கிறோம்.வாழ்க வளமுடன்.
-
sooperb ji..ena sola therilaa ...apdi eh mirasleeee ayitan,..wish u all d best
-
thnks jooo
-
அதென்ன காதல் கவிதைகளை மட்டும் ரொம்ப ரசிச்சு எழுதுறிங்க ஸ்வீட்டி. அதன் மர்மம் என்னவோ? நல்ல கவிதை தொடர்ந்து உங்கள் கவிதைகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
-
நன்றிகள் சைபர் jakeguy gab dong lee and shabu காதல் கவிதைகளை ரசித்துப் படிக்கும்போது அவை ரசித்து எழுதப்பட்டவை போலத்தான் இருக்கும். படிப்பவர்களின் சந்தோஷத்தை விட
ஒரு கவிஞருக்கு வேறு என்ன வேண்டும்????
-
machan lol athey doubt than enakkum :Dinnum ethirpaarkkuren sweetie ungakitta irunthu...