FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 10, 2015, 11:21:05 PM
-
முட்டை குருமா
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10009760_1503094393321364_3201027670387086607_n.jpg?oh=b97ebe7b48f11186156075482591fd51&oe=56871897)
முட்டை குருமா இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம் அனைத்திற்கும் நன்றாக இருக்கும். எளிய முறையில் முட்டை குருமா செய்வதற்கான குறிப்பு இது.
தேவையான பொருட்கள் I
முட்டை – 4
பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 2
தக்காளி – 1
பிரியாணி இலை – 1
கல்பாசி – 2
சீரகம் – 1 /4 தேக்கரண்டி
கருவேப்பிலை – 10 இலைகள்
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
தனியாதூள் – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
மல்லிதழை – 4 கொத்து
தேவையான பொருட்கள் II
தேங்காய் துருவியது – 1 /2 கப்
முந்திரிபருப்பு – 2
பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 /2 கப்
தேவையான பொருட்கள் III
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 3 பல்
இஞ்சி – ஒரு துண்டு
சோம்பு – 1 /4 தேக்கரண்டி
செய்முறை
தேவையான பொருட்கள் III ல் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள் II ல் கொடுத்துள்ள பொருட்களை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
முட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
சிறிது நேரம் வதங்கிய பின்பு, III ல் அரைத்த விழுதைச் சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்(2 நிமிடங்கள்).
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அனைத்து தூள்களையும், உப்பும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும் அல்லது எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இறுதியாக தேங்காய் விழுது ,தண்ணீர், முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.
குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வைத்து மல்லிதழை தூவி பரிமாறவும்.