FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 08, 2015, 05:08:35 PM
-
ஸ்டஃப்டு பப்பட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fndriyz%2Fimages%2Fp56a.jpg&hash=f6a44998d0b41ce947c26414cc9cc422aa7311f7)
தேவையானவை:
மசாலா அப்பளம் - 10, உருளைக்கிழங்கு (பெரியது) - ஒன்று, துருவிய பனீர் - 50 கிராம், கரம்மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும். அத்துடன் உப்பு, துருவிய பனீர், பச்சை மிளகாய் விழுது, கரம்மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும். ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும். உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும். எண்ணெயைக் காயவைத்து, உருட்டிய அப்பளங்களை அதில் போட்டு பொரித்தெடுக்கவும். சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.
-
கொய்யா இனிப்பு வடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fndriyz%2Fimages%2Fp56c.jpg&hash=7339451ad0c88022d2fe5ed7a1ab3b51ab826f3a)
தேவையானவை:
பெரிய கொய்யாப் பழம் - 2, உளுந்து, சோயாபீன்ஸ் - தலா அரை கப், கெட்டிப்பால் - தேவையான அளவு, பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன், பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை (சிரப் தயாரிக்க) - இரண்டரை கப், எண்ணெய் - 300 கிராம்.
செய்முறை:
உளுந்து, சோயா பீன்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, பால் சேர்த்து வேகவிட்டு எடுத்து, கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும். கொய்யாப்பழத்தின் தோல், விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும். அரைத்து வைத்த மாவுடன் பொடித்த சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்த்தூள், மசித்த கொய்யாப்பழம் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, நிதானமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.
சர்க்கரையில் நீர் விட்டுக் கொதிக்க வைத்து கெட்டி `சிரப்’பாகக் காய்ச்சி இறக்கவும். வடைகளை ஒரு பெரிய தட்டில் வரிசைப்படுத்தி, ஒவ்வொரு வடையின் மீதும் சமமாக `சிரப்’ விடவும். விருப்பப்பட்டால், கொப்பரைத் துருவல் தூவி அலங்கரிக்கலாம்.
-
டிப்ஸ்...
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fndriyz%2Fimages%2Fp56b.jpg&hash=cddbbb07f96039b55079a899796bae13f6c26768)
ஒரு ஸ்பூன் சீரகத்தை பொன் வறுவலாக வறுத்துப் பொடித்து, அதனுடன் கல்கண்டு பொடி சேர்த்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு அரை ஸ்பூன் கொடுக்கவும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fndriyz%2Fimages%2Fp56d.jpg&hash=f3ca0b62b1a6cffa8dd061d8539f6a0e5085e583)
மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சுலபத்தில் உறையாது. அப்போது பாலை ஒரு ஹாட்கேஸில் ஊற்றி உறை குத்தி மூடி வைத்தால் சீக்கிரமாக உறைந்துவிடும்.