FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 05, 2015, 10:54:57 PM
-
சாக்கோ - கோகனட் பால்ஸ்
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12118827_1501628983467905_7332063330923477021_n.jpg?oh=b9f1a817ef2fb1401803bd78b680d446&oe=568B9C5F)
என்னென்ன தேவை?
கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன் (தலை தட்டாமல்),
கன்டென்ஸ்டு மில்க் - 3/4 கேன்,
மில்க் பிஸ்கெட் - 10,
கொப்பரைத் தேங்காய்ப் பொடி - 1 கப்,
மைதா - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மில்க் பிஸ்கெட்டுகளை கைகளால் பொடித்துக் கொள்ளவும். 3/4 கப் கொப்பரை தேங்காய்ப் பொடி, கோகோ பவுடர் மற்றும் பொடித்த பிஸ்கெட்டுகளை நன்கு கலக்கவும். அத்துடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். ஒரு தட்டில் மீதமுள்ள தேங்காய்ப் பொடியை எடுத்துக் கொண்டு, இரு கைகளிலும் மைதாவை தேய்த்துக் கொண்டு இந்தக் கலவையை உருண்டைகளாகப் பிடித்து தேங்காய்ப் பொடி கலவையில் உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இந்த உருண்டைகளை ஃப்ரிட்ஜில் 3 முதல் 5 மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு பரிமாறவும்.