FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on October 05, 2015, 02:17:38 PM

Title: ~ பத்திய சமையல் ~
Post by: MysteRy on October 05, 2015, 02:17:38 PM
பத்திய சமையல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp68.jpg&hash=4c61450eca5a3f4603d44e156f764fad3c33c529)

காய்கள், பழங்கள் மட்டுமின்றி இலைகளிலும் நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு. இறைவன் நமக்கு அளித்த இந்தக் கொடையைப் பயன்படுத்தி,  நமது சமையல் அறையில் உள்ளவற்றைச் சேர்த்து, நமது உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க உதவும் வகையில், `நாரத்தை இலைப் பொடி’ மற்றும் `வெந்தயத் தயிர்’ ஆகிய ரெசிப்பிக்களை  வழங்குகிறார் சமையல்களை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
Title: Re: ~ பத்திய சமையல் ~
Post by: MysteRy on October 05, 2015, 02:20:46 PM
வெந்தயத் தயிர்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp68a.jpg&hash=c4dee00629944221b2abba3a5ea724cc9779dc22)

தேவையானவை:

பால் - ஒரு கப்
 தயிர் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு கொத்து
 வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதல் நாள் இரவே பாலைக் காய்ச்சி, ஆறவிட்டு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போது  கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து இத்துடன் தயிர் சேர்த்து உறை ஊற்றவும். மறுநாள் காலை வெறும் வயிற்றில் இதனைச் சாப்பிடவும்.

தீர்வு:

தலைமுடி உதிர்வதை நிறுத்தும்; இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்; மலச்சிக்கல் பிரச்னையையும் இது தீர்க்கும்.
Title: Re: ~ பத்திய சமையல் ~
Post by: MysteRy on October 05, 2015, 02:23:06 PM
நாரத்தை இலைப் பொடி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval_kitchen%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp68b.jpg&hash=c941dacab29fe8451efd7a6c8a1a028b5654cafb)

தேவையானவை:

 இளசான நாரத்தை இலை - ஒரு கப்
 இளசான எலுமிச்சை இலை - அரை கப்
 இளசான கறிவேப்பிலை - கால் கப்
 காய்ந்த மிளகாய் - 3
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
 உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
 புளி - கொட்டைப்பாக்கு அளவு
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நாரத்தை இலை, எலுமிச்சை இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியே கழுவி நிழலில் உலர்த்தவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு இவற்றை வதக்கித் தனியே வைக்கவும். மீதியுள்ள எண்ணெயை கடாயில் விட்டு காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு இவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து... பிறகு இலைகளையும் சேர்த்து உப்பு, புளியை சேர்த்துப் பொடிக்கவும். அனைத்தையும் நன்றாகக் கலந்துவிடவும்.
இந்தப் பொடிகளை சிறிதளவு எண்ணெய் விட்டு உருண்டைகளாகப் பிடித்தும் உபயோகிக்கலாம். இந்த நார்த்தை இலைபொடியை சாதத்தில் போட்டுப் பிசைந்து நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடலாம்.

தீர்வு:

இது, எல்லாவித ஜீரணக் கோளாறுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். பித்தம், வாந்தி, மயக்கம் போன்றவற்றை மட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஏற்றது.