FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on October 05, 2015, 06:24:49 AM
-
கட்டிளங்காளை தெருவில் போகுது
எட்டி பாருங்கடி கொஞ்சம்
வேலியை நீக்கி எட்டி பார்த்து
கண்ணடிச்சது நம்ப முப்பாட்டி காலம்
ஊருக்குத் தெரியாமல் மாந்தோப்பு பக்கம்
சங்கிலி போட்ட மைனர் சாஞ்சு படுத்திருக்க
கோவிலுக்கு போகிற சாக்கில காயிதம் கொடுத்து
சைட் அடிச்சது நம்ப பாட்டி காலம்
அடுக்கு மொழியில் அத்தானுக்கு காகிதம்
ஆசையாய் எழுதி.தங்கச்சியை தூதனுப்பி
சைட் அடிச்சு சந்தோசப்பட்டதும்
தபால்காரன் வருகைக்கு வாசலில் காத்துநின்று
அண்ணன் கையால் அடி வாங்கியது அம்மா காலம்
கணணியும் கைபேசியும் முன்னறி தெய்வம்
வலைதொடர்பு இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்
facebook . whatsup . viber . instagram என
புது மொழிகள் பேசும் வலை யுகத்தில்
புதிய பாணியில் சைட் அடிக்கும் காலம் நமது
-
டார்வின் கொள்கையை உபயோக படுத்திய விதம் மிக அருமை.பாராட்டுக்கள்
-
மூன்று தலைமுறைகளோட காதல ..எப்டிலாம் பாத்து ரசிச்சாங்க நு அருமையா சொல்லிருகிங்க .தேர்ந்த கவிஞரா ஆகிட்டே வரீங்க..வாழ்த்துக்கள்
-
இவங்க எதுல எல்லாம் ஆராய்ச்சி பண்ணுறாங்க. கலக்குங்க ஸ்வீட்டி.
-
:D thts y nowdays yellam gng like smethng...nice poem thala semma...ungalku yellam side yum poem semma ya panrenga...best wishes to u jii
-
சைட் அடிப்பது காலம் காலமாய் நடக்கும் கலைதானே.
ஒரு சின்ன கற்பனை. நன்றி தோழர்கள் ஜோக் guy , டாங் லீ ,
Gab சைபர் viper
-
nice sweetie. ippo ellam online la than love pandranga but ithu saathiyamaguma???