FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiThiLa on October 03, 2015, 03:34:27 PM

Title: என் இமையோர கனவுகள்
Post by: NiThiLa on October 03, 2015, 03:34:27 PM
என் இமையோரக் கனவுகள்
[/size][/color] 

1)
பச்சை  புல் வெளி
அடர்ந்த வனம்
மேலே பரந்த நீல வானம்
பட்சிகளின் இனிய கானம்
சலசலத்து ஓடும் நதியின் ஓசை
நடுவில் ஒரு சிறிய குடில்
அதில் நீயும் நானும்
கேட்கிறேன் இறைவனிடம்,

ஏனெனில் ,
அங்கு இயற்கையோடு நாம் மட்டும்
இந்த செயற்கை உலகின் தடைகள் இல்லை,
உன்னை என்னிடமிரிந்து பிரிக்க

அங்கு கை பேசியின் சிணுங்கலும்  இல்லை
என் கால் கொலுசின் செல்ல சிணுங்கல் மட்டுமே

அங்கு நம் இருவரின் காதல் மட்டும் பேசும்
இதய துடிப்பின் தாளத்தில்

வா என் உயிரே
இயற்கையின் மடியில்
அன்பின் கதகதப்பில்
இருவரும் கைதிகளாகிட


2)
இதமான இரவு
சுகமான  தென்றல்
உன் விரலோடு விரல் கோர்த்து
தோள் சாய்ந்து
நடக்கிறேன் உன்னோடு
இது கண்டு வெட்கம் கொண்ட
நிலவு முகம் மறைத்தது
வான் முகில் இழுத்து
ஏங்குகிறேன்
இந்த நொடியில் உலகம் நின்று விட

3)

பிறந்தவுடன் தேடினேன் உன் முகம் காண
காணவில்லை அழுதேன்
வளரும் பொழுதும் தேடினேன் என் தேடல்
நீ என புரியாமல்

வளர்ந்து குமரியகியும் தேடினேன் நீ
என் கண்ணில் விழுந்து
உயிரில் இறங்கினாய்

இன்னும் தேடுகிறேன் ஆசையாக
திருடுகிறேன் உன் இனிமைகளை

உயிர் பிரியும் போதும் தேடுவேன்
இறுதியாய் உன் முகம் காண

மீண்டும் பிறந்து வந்து தேடுவேன்
உயிரே காத்திரு
எனக்கு முன் பிறந்து

[/color]
Title: Re: என் இமையோர கனவுகள்
Post by: JoKe GuY on October 04, 2015, 12:05:01 AM


அங்கு கை பேசியின் சிணுங்கலும்  இல்லை
என் கால் கொலுசின் செல்ல சிணுங்கல் மட்டுமே


மீண்டும் பிறந்து வந்து தேடுவேன்
உயிரே காத்திரு
எனக்கு முன் பிறந்து

மிக அழகான மனதை மயக்கும் வரிகள்.மேலும் உங்களின் கனவுகள் வளர வேண்டும் .தொடரட்டும் உங்களின் கவிதை படைப்புகள் .
[/quote]