FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 02, 2015, 07:45:05 PM
-
அகத்தி கீரையின் மருத்துவம்
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xal1/v/t1.0-9/12063542_1500938886870248_1743012974670678348_n.jpg?oh=dcedcced392eebe6929a675f518c36bd&oe=56939067&__gda__=1451790155_a427dc344474bdf479dc93bcc5b95cfa)
அகத்தி கீரை = அகம்+தீ+கீரை என்றால் பித்தம் போக்க கூடியது.
* இதில் வைட்டமீன்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்து, தாது பொருட்கள் அதிகமாக உள்ளது.
* குழந்தை பெற்ற தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.
* கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.
* அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.
* இந்த அகத்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழுவை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும்.
* இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் சுரம் போய்விடும்.
* வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.
* அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக் கோளாறு சரியாகும்.
* வேறு மருந்து சாப்பிடும்போது இக்கீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். அதனால் மருந்து சாப்பிடும் காலங்களில் இந்த கீரையை சாப்பிடக்கூடாது.
* இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தம் கெட்டுப் போக வாய்ப்புண்டு. சொறியும், சிரங்கும் வரலாம். இரத்த சோகையும் வரலாம். வயிற்று வலியும் பேதியும் வரலாம்.
* இது வாயு கோளாறை உருவாக்கும். அதனால் வாய்வுக் கோளாறு இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடக் கூடாது.