FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CybeR on October 01, 2015, 02:00:53 PM
-
ஒருதலைக்காதல்
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்
கண்டேன் என் முதல் காதலை...
கடந்த சென்றாள் என்னை..
கவனிக்காமல் சென்றாளா!
கவனிக்காதது மாதிரி
சென்றாளோ!!
நெஞ்சம் கனத்தது...
கண்கள் பனித்தது..
சுகமாய் தெரிந்தது அன்று!
சுமையாய் ஆனது இன்று
காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை!!!!!!!!!
-
சொல்லவே இல்லை பார்த்திங்களா
-
ஒருதலைக் காதலில் ஏமாற்றம் சகஜம். விட்டுவிடுங்கள்...
கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்
-
சைபர் உங்களின் ஒரு தலை காதல் வெற்றியடைய வாழ்த்துகள்
-
ஹி ஹி ஹி என்னக்கு இல பா...ஜஸ்ட் லைக் தட்.தேங்க்ஸ் போர் யுவர் லைக் அண்ட் கமெண்ட்ஸ்.