FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on September 30, 2015, 02:17:10 AM

Title: காத்திருப்பேன் உனக்காக
Post by: SweeTie on September 30, 2015, 02:17:10 AM
சந்திக்காத வேளையில் சிந்திக்கிறேன் உன்னை
கரையை நோக்கி  அலையாகத் தவழ்ந்து வருவாயா
இரவிலே நிலவின் ஒளியாக அசைந்து வருவாயா
காற்றிலே இசையாக மிதந்து வருவாயா
தீயிலே சுடராக பறந்து வருவாயா
காத்திருப்பேன் உனக்காக ..

முதல் பார்வையிலே என் கண்ணில் நிறைந்தாய்
என் உடம்பின் அணுக்கள் ஒவ்வொன்றும் உன்னை உள்வாங்க
என் இதயத்தில் சிக்கிக் கொண்டு நீ தவிப்பதும்
உன் மூச்சு என் மூச்சுடன் சங்கமித்து புரள்வதும் 
உனது பொய்களை நான் விரும்பி ரசிப்பதும்
எனது ஊடலை நீ கொஞ்சி மகிழ்வதும் .....
இதுக்கு பெயர்தான்  காதலா???

மலைக் குகையில் மறையும் மான் என்றாய்
கண் மடலில் தேங்கி நிற்கும் மீன் என்றாய்
பூக்களின் மகரந்தத்தில் நிறைந்திருக்கும் தேன் என்றாய்
உன் உயிரே நான் என்றாய்
இது காதலின் எந்த நிலையோ??
Title: Re: காத்திருப்பேன் உனக்காக
Post by: JoKe GuY on September 30, 2015, 07:45:33 PM
மலைக் குகையில் மறையும் மான் என்றாய்
கண் மடலில் தேங்கி நிற்கும் மீன் என்றாய்
பூக்களின் மகரந்தத்தில் நிறைந்திருக்கும் தேன் என்றாய்
உன் உயிரே நான் என்றாய்

மான், மீன், தேன், நான் என்று அடுக்கு வார்த்தையில் கூறியது. உங்களின் கவிதை நடை மிக அழகு.பாராட்டுக்களுக்கு உரியது.
Title: Re: காத்திருப்பேன் உனக்காக
Post by: gab on October 01, 2015, 07:24:15 PM
உங்க கவிதைகளில் காதலின் ஆக்கிரமிப்பு அதிகம் இருக்கிறதே.  தொடர்ந்து உங்கள் காதல் ரசனை மிகுந்த கவிதைகள் பொதுமன்றத்தில் வலம் வருவதை காண ஆவலாய் இருக்கிறேன் .
Title: Re: காத்திருப்பேன் உனக்காக
Post by: ராம் on October 01, 2015, 10:38:48 PM
enna nilaiyo therila but kaathalnu mattum confirm ah theriyuthu sweetie veveve
Title: Re: காத்திருப்பேன் உனக்காக
Post by: Dong லீ on October 02, 2015, 12:12:47 AM
ரொம்ப கொடுத்து வச்சவரு போல உங்க காதலன் .. கலக்குறிங்க ஸ்வீடி ..வாழ்த்துக்கள்
Title: Re: காத்திருப்பேன் உனக்காக
Post by: CybeR on October 04, 2015, 10:33:07 PM
உன் உயிரே நான் என்றாய்
இது காதலின் எந்த நிலையோ??

ஜிஈ வாவ் செம்ம செம்ம தரு மாரூ தகழி சோறு ஜோ..வெள் எப்டி எவ்ளோ இடு சுபெர்ப்  ஜி..இன்னும் நறிய கவிதை எழுட மி பெஸ்ட் விஷேஸ் ஜி.
Title: Re: காத்திருப்பேன் உனக்காக
Post by: SweeTie on October 05, 2015, 05:55:49 AM
'Thank you  Joke Guy,  Gab, Ram,  Dong Lee, and Cyber.   
Dong Lee  romba over  ah illa .... ;D ;D