FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiThiLa on September 29, 2015, 05:07:24 PM

Title: கவின் மலரின் கவிதை பூங்கா 4
Post by: NiThiLa on September 29, 2015, 05:07:24 PM
பசுமை


 ஒளிக் கரங்களால் துயில் எழுப்புகிறான் பகலவன்
செல்லமாய் தூக்கம் கலைக்கும் காலைத்தென்றல்
இனிமையாய் சுப்ரபாதம் பாடும் பறவைகளின் கீச்சொலி
சலங்கையின் நாதமாய் சிணுங்கும் நதியின்  ஓசை
தூரத்து அருவியின் ஆரவாரம்
இப்படி ஒரு இனிமையின் பிடியில் இருந்தேன்
சட்டென்று கேட்டேன் ஹாரன்  ஒலி , எல்லாம் கனவு
இவை இனி கனவில் மட்டும் தானோ ?
மரங்களால் ஆகிய காடுகளை அழித்துவிட்டு
பசுமையை தேடுகிறோம் கான்கிரீட் காடுகளில்




கற்பக விருட்சம்

பொறுமை
சகிப்புத்தன்மை
தியாகம்
வாரி வழங்குதல் என ஒப்பிலா உயர்வுகளோடு

தன் பரப்பில் வேர் பரப்பி விருட்சமாகும்
மரங்களையும்,
தன் மீது ஆனந்தமாய் குதித்தோடும்
ஆறுகளையும்,
தன்னை அடித்தளமாய் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும்
கான்க்ரீட்  காடுகளையும் ,
தன்னை தூர்ந்தாலும் பொன் கொழிக்கும்
சுரங்கங்களையும் ,
காய் ,கனி,வேர்,பட்டை , இலை  என
கற்பக விருட்சமாய் வாழ்ந்து ,

"' நீரின்றி அமையாது உலகு"'
 ஆனால் ,
"" மரங்களின்றி அமையாது சுவாசம் "

 
இனியும் தாமதிக்காது,
தன்னை தந்து பிற உயிர்களை வாழவைக்கும்
மரங்களுக்கும் வந்தனை செய்வோம்
இனியாவது புதிய உலகு படைப்போம்
.

Title: Re: கவின் மலரின் கவிதை பூங்கா 4
Post by: JoKe GuY on September 29, 2015, 07:06:24 PM
கற்பக விருட்சமாக வளரட்டும் உங்களின் கவிதை செடிகள்.
Title: Re: கவின் மலரின் கவிதை பூங்கா 4
Post by: SweeTie on September 29, 2015, 07:12:33 PM
அழகிய கவிதைகள்.  தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்.
வாழ்த்துக்கள்