FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 27, 2015, 10:55:00 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp15.jpg&hash=6f8eafc8c3d27d5a74a5ff61134f04fb3d7df08d)
கடலை மாவு, மஞ்சள் பொடி, தயிர் ஆகியவற்றைக் கலந்து கூழாக்கி, அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு, பிறகு நன்கு கழுவிவந்தால்... முகத்தில் முடி வளர்வதை குறைத்துவிடலாம்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp15b.jpg&hash=383dd9639f02c8d32302992f781718f85f6d5c6d)
தோசைக்கு ஊறவைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால்... தோசை மொறுமொறுப்பாக வருவதுடன், நல்ல வாசனையாகவும் இருக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp15a.jpg&hash=d405b51204189787c5b297bd0947b88af823dddd)
சீரகம், ஓமம், மிளகு இவற்றை வறுத்து... பெருங்காயம், சுக்கு சேர்த்துப் பொடி செய்யவும். எந்த சுண்டலாக இருந்தாலும், இறக்குவதற்கு முன் இந்தப் பொடியைக் கொஞ்சம் தூவிக் கிளறி பயன்படுத்தினால், வாயுக் கோளாறு, வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp60a.jpg&hash=c7831541a74dbe6d5e7b4a3b9e6f2d7b50147079)
கேரட் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், ரத்தசோகை நீங்கும்; ரத்தம் விருத்தியடையும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp60b.jpg&hash=1af057ba4a35072dbcd1a2c2950fc28088cec00d)
எந்தக் கிழங்காக இருந்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து, பிறகு எடுத்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp60c.jpg&hash=6db0e14aad8734a66cc40dda9aa9e8785b8a93ec)
ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி அதில் விரல்களைச் சிறிதுநேரம் வைத்திருந்தால், நகம் உடையாமலிருக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp60d.jpg&hash=852e61e2b3f24e0d9bb4dbfb7289b002f64f41de)
வேப்பிலை, கறிவேப்பிலையை சம அளவு எடுத்து, நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அந்த நீரைக் கொண்டு தலையை அலசினால். பேன் இருக்காது: முடி கருமையாகும்; முடி உதிர்தலைத் தடுக்கும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp77a.jpg&hash=4f6f3fb3f70e5c3fba4f3e9a8e39c81e3e022b9c)
சப்பாத்தி மிகுந்துவிட்டால், அதை மிக்ஸியில் பூப்போல அரைத்து... சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறுங்கள். குழந்தைகள் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்டு, விரும்பிச் சாப்பிடுவார்கள்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp77b.jpg&hash=b03f3e4a707a425fcf6cd855417cdf1f7abfaf39)
வெள்ளைப் பூண்டை அரைத்து, பூச்சி, வண்டு கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால்... வீக்கம், வலி குறையும்.
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp77c%25281%2529.jpg&hash=6b4f861001ef5c0f8d412c36ca8e2c5a7316e1b0)
தேநீர் தயாரிக்கும்போது துளசி இலைகளைச் சேர்த்தால், தேநீர் மணமாக இருக்கும்; ஜலதோஷத்தில் இருந்தும் காக்கும்.