FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 25, 2015, 01:00:19 PM
-
இதயத்தை பாதுகாக்க சில யோசனைகள்
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-9/12009666_1499449983685805_8826938737218226369_n.jpg?oh=f9bdaebb6bb39447ce26751828142476&oe=569B4CEF&__gda__=1453479594_418e894a14b3658ea24a417286b30c46)
* மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை
நிறுத்தி விட்டால் நலம்.
உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில
நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு
விளைவிக்கும்.
* உடல் எடை குறைவு - சரியான உடற்பயிற்சி மூலம் தான் அடைய முடியும்.
குறிப்பாகஎடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற்பயிற்சி அவசியம்.
* நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை
குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.
* மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு
நல்லது.
* பிரஷ் ஆக உள்ள காய் - பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில்
வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.
பிரஷ் ஆக உள்ள காய் - பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும்
இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.
* உபயோகபடுத்திய சமையல் எண்ணெய்களை மீண்டும் உபயோகபடுத்தாதீர்கள்.
* புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை
விளைவிக்கும்.
* தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால்
குறைக்க
உதவும்.
* சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.
* மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு
மனச்சுமை (Stress) வருகிறது. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர்
பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது
உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.
* கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள்.
அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை
உணருங்கள்.
* குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
* உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை
அனுமதிக்காதீர்கள்.
* மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம்
தொந்தரவு
செய்வதில்லை.
* சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை
போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க
பட்டுள்ளது.
* மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு.
தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
நம்பிக்கையும் நேர்மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய
நோய்களிலிருந்து மீள உதவும்
* வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.