FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 25, 2015, 11:40:50 AM

Title: ~ உருளைக்கிழங்கு சப்பாத்தி ~
Post by: MysteRy on September 25, 2015, 11:40:50 AM
உருளைக்கிழங்கு சப்பாத்தி

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12002934_1498954297068707_7323651901243821484_n.jpg?oh=8240d44290690a5d0809835cb993ed99&oe=56AA66FE)

என்னென்ன தேவை?

வேக வைத்த உருளைக்கிழங்கு – 3,
கோதுமை மாவு – 2 கப்,
உப்பு -2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
கசூரிமேத்தி – 1 டீஸ்பூன்,
தண்ணீர் -1/4 டம்ளர்,
எண்ணெய் / நெய் – 10 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்குகளை நன்கு மசித்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். சப்பாத்திகளைத் தேய்த்து எண்ணெய் சேர்த்து தோசைக்கல்லின் இருபுறமும் வாட்டி எடுக்கவும். வெண்ணெய் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.