FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 25, 2015, 11:14:47 AM

Title: ~ நோய்களுக்கு அரண் போடும் மீன்கள் ~
Post by: MysteRy on September 25, 2015, 11:14:47 AM
நோய்களுக்கு அரண் போடும் மீன்கள்

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/12047183_1498584823772321_8197750587247080860_n.jpg?oh=d842b7888bb64666446e9876a19e9d2d&oe=569BBFAB&__gda__=1453984288_445b63ac6e8eadc6e53f87be0baf79bb)

அசைவ உணவுகளில் அதிகம் நன்மை தருவது மீன். உணவில் அடிக்கடி மீனைச் சேர்த்து வந்தால் எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

• அதிகபுரதச்சத்துள்ள மீனில் ஓமேகா 3 அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.

• மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு ஏற்படாது.

• மூளைக்கும், கண் பார்வைக்கும் மீன் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஓமேகா 3 அமிலம் மூளையைச்சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

• தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.

• வெள்ளை மீன் உணவுகளைக் காட்டிலும் கருப்பு மீன்கள், சாலமன் மீன்கள் போன்றவை சிறந்த பலன் அளிக்கும்.

• ஞாபகசக்தி திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.

• இரத்தக்கட்டு, இரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்சனை போன்ற எதுவும் வராது.

• இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது மீன் உணவு. மீன் எண்ணெயைச் சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவு குறையும்.