FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on December 29, 2011, 08:03:52 PM

Title: இரத்த சோகையை குணமாக்கும் உலர் திராட்சை!
Post by: Yousuf on December 29, 2011, 08:03:52 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.thoothuonline.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F12%2F%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AE%25B4%25E0%25AE%25AE%25E0%25AF%258D-270x168.jpg&hash=31f4f6a5d1f640fe9a7ac8849f60981d3541423a)

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள் ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத்  தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
Title: Re: இரத்த சோகையை குணமாக்கும் உலர் திராட்சை!
Post by: Global Angel on December 29, 2011, 11:10:51 PM
இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயன்படுத்தலாமா ?
Title: Re: இரத்த சோகையை குணமாக்கும் உலர் திராட்சை!
Post by: Yousuf on December 30, 2011, 02:34:03 PM
சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா என்பது எனக்கு தெரிய வில்லை. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு அவர் ஒப்புதலுக்கு பின்னல் பயன்படுத்துவது நன்று!