FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on December 29, 2011, 07:43:45 PM

Title: இறையச்சம் எங்கே?
Post by: Yousuf on December 29, 2011, 07:43:45 PM
குடித்து குடித்து கெடுகிறாய் உன்
குடலை வேகவைத்து கொல்கிறாய்
குடும்ப நிம்மதியையும் சேர்த்து
குழைத்துக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

வசதியிருந்தும் வாய்பிருந்து
வசதியற்ற ஏழையிடம் வட்டிக்குமேல்
வட்டிவாங்கிப் பிழைக்கிறாய் -அவர்களின்
வயிற்றெருச்சலை வாங்கிக்குவித்து தன்
வாழ்கையையே  கெடுத்துக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

வறுமைகளை போக்கிவிட எத்தனையோ
வழிகளிருந்தும் வழி தவறிப் போகிறாய்
வியாதி தரும் வெறுப்பு தரும்
விபச்சாரத்தையே தொழிலாக்கிக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

அளவு நிறுவைகளில் குறைக்கிறாய்
அநியாயம் செய்து பிழைக்கிறாய்
அடுத்தவரின் பொருளுக்காக
ஆசைப்படும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

அனாதைகளின் சொத்துக்களை
அபகரித்துக் கொள்கிறாய்
அத்துமீறும் செயலைக்கூட
அலச்சியமாய் செய்யத்துடிக்கும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

ஆடைகளை குறைத்து குறைத்து
அங்கங்களை அழகுக்காட்டி
அடுத்தவரையும் பாவத்துக்கு
அழைத்து தூண்டும் மனிதனே

இறையச்சம் எங்கே
 உனது
இறையச்சம் எங்கே

மனத்துக்கும் பிடிக்காமல்
மகிழ்சியையும் கொடுக்காமல்
மற்றவருக்காக வாழ்ந்துகொண்டு
மனசாட்சிக்கு துரோகம் செய்யும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

உதிரம் கொடுத்து உழைப்பும் கொடுத்து
உயிராய் வளர்த்த பெற்றோரை
உன்னால் பேணிக்காக்க முடியாமல்
உதறிவிட்டு முதியோரில்லம் சேர்த்துவிடும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

நலவு செய்தால் நன்மையுண்டு
நாளை நமக்கும் வாழ்வு உண்டு
நல்லது கெட்டது அறிந்து கொண்டு
நலமாய் வாழ முயல்வோம் என்றும்...




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
Title: Re: இறையச்சம் எங்கே?
Post by: RemO on December 30, 2011, 12:49:55 PM
iraivan irukaananu doubt
Title: Re: இறையச்சம் எங்கே?
Post by: Yousuf on December 30, 2011, 03:08:13 PM
இறைவன் இருக்கிறான் இறைவனை பற்றிய அச்சம் தான் இந்த மனிதர்களிடத்தில் இல்லை!

மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு தண்டனை கொடுக்க நாடினால் உலகில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள்!

இறைவனின் பொறுமை மிகவும் பெரியது!