பழத்தோலும் பலம்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2015%2F10%2Fywvlnj%2Fimages%2Fp38h.jpg&hash=1bc95bb4b05321b7f2385a91148cfeb916b400b9)
இயற்கை ஓர் அற்புதம்; அதன் கொடை மகத்தானது. அந்த வகையில், இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடியவை பழங்களும் காய்கறிகளும். பழத்தைவிட, தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது பொதுவான கருத்து. மாதுளை, பலா உள்ளிட்ட பல பழங்களின் தோல்கள் கடினமானவையாக இருக்கும்; பயன்படுத்த முடியாது. ஆனால், கொய்யா, மாம்பழம், ஆப்பிள் போன்ற சில பழங்களைத் தோலுடன் சாப்பிட முடியும். இங்கே சில பழத் தோல்களும் அவற்றின் பயன்களும்...