FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 17, 2015, 09:23:47 PM
-
ஓட்ஸ் கொழுக்கட்டை
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/12006101_1497412357222901_667606116232698944_n.jpg?oh=7672fecd7cd74203bbad8490e45193c2&oe=56694F4B&__gda__=1449848445_d1dbd0db5f86b35410d44073b060afb6)
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 1/4 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் ஓட்ஸை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
நீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு இட்லி தட்டில் மற்றும் கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, அதனை கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்து, பின் இந்த தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஓட்ஸ் கொழுக்கட்டை ரெடி!!!