FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 12, 2015, 10:25:14 AM

Title: என் வரிகளில் - ஆனந்த யாழினை மீட்டுகிறாய் (தங்க மீன்கள் )
Post by: aasaiajiith on September 12, 2015, 10:25:14 AM
என் வரிகளில் - ஆனந்த யாழினை மீட்டுகிறாய் தங்க மீன்கள்


உன் அழுகையினை கொண்ட 
தலையணைக்கு மட்டும்தான் தெரியும் 
கண்ணீர் தண்ணீரினை சேர்ந்ததில்லை என்று 

காதலன் நானென போற்றுகிறாய் 
உயிர் காதலும் ஈதென சாற்றுகிறாய் 
சுவாசத்தை சங்கீதமாய் மாற்றுகிறாய் 
அதில் போதையை சிறுதுளி ஏற்றுகிறாய் 

இரு நெஞ்சம் இணைந்து கலந்திடின் - இதர 
ஆசைகள் எதுவும் சராசரி 
உந்தன் காதல் அதுவும் தொடரும் என்றால் 
அடி மரணம் கூட சரி சரி 

உன்னை என்னும் நினைவுகள் இன்பவலி 
இன்னும் வேண்டுமென்றே என்னுள் தோன்றுதடி 
இந்த மண்ணில் எனைப்போல் காதலிக்க 
இங்கு யாருமில்லை என்றபடி காதலி நீ 

காதலன் நானென போற்றுகிறாய் 
உயிர் காதலும் ஈதென சாற்றுகிறாய் 
சுவாசத்தை சங்கீதமாய் மாற்றுகிறாய் 
அதில் போதையை சிறுதுளி ஏற்றுகிறாய் 

உலகத்தின் அழகெல்லாம் பார்க்குமடி 
உனைவெல்ல முயன்று தோற்க்குமடி
அருவிக்கும் அதிர்ச்சியில் வேர்க்குதடி
இயற்கையும் தோல்வியை ஏற்க்குமடி 

சந்திக்க வேண்டாம் என 
சிந்திக்க வேண்டாம் 
உனது மூச்சே  மோட்சமடி 

இந்த மண்ணில் எனைப்போல் காதலிக்க 
இங்கு யாருமில்லை என்றபடி காதலி நீ 


பூக்களின் இனமேயுன் சொந்தமடி 
என்றெனை சேரும் நின் சொந்த மடி 
நின் சினுங்கல் , விசும்பல் சந்தமடி 
வான் மழை பன்னீராய் சிந்துமடி 

அதை கையில் பிடித்து 
நாசியில் நுகர்ந்து
நெஞ்சினில் நிறைப்பேன் 
நிறைய வேண்டும்படி 

இந்த மண்ணில் எனைப்போல் காதலிக்க 
இங்கு யாருமில்லை என்றபடி காதலி நீ 

காதலன் நானென போற்றுகிறாய் 
உயிர் காதலும் ஈதென சாற்றுகிறாய் 
சுவாசத்தை சங்கீதமாய் மாற்றுகிறாய் 
அதில் போதையை சிறுதுளி ஏற்றுகிறாய்