FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 28, 2011, 11:45:06 PM

Title: உன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.
Post by: Global Angel on December 28, 2011, 11:45:06 PM
உன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.  

நீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும்
உன்னைவிட பேரழகு
ஒன்றும் இல்லை
இந்த உலகத்தில் எனக்கு...

நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி
அணைக்க தூண்டும் அழகு இல்லை...
ஆனாலும்
பழகியவுடன் அள்ளிக் கொஞ்ச
தோன்றும் என் செல்லகுட்டி நீ...

எதோ காரணங்களுக்காய் சண்டையிட்டு
என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.
நீயாய் பேசுவாய் என நானும்,
நானாய் பேசுவேன் என நீயும்,
ஈகோ நண்பனை தோளில்
சுமந்தபடி காத்திருக்கிறோம்.

கோபம் கொள்ளும் நேரங்களில்
ஏதேதோ காரணங்கள் கொண்டு
உன்னிடம் பேச வருவேன்.
மிக இயல்பாய் என்னை
மரியாதையாய் அழைப்பாய்.

அது எதோ அந்நியப்படுதல் போலிருந்தாலும்,
அதிலும் ஒரு அழகுணர்ச்சி இருக்கும்.
உன்னை தவிர்க்க வேண்டும் என நினைத்து
நான் செய்யும் அத்தனை காரியங்களிலும்
நீயே தெரிவாய்.

நம் கோபங்களின் முடிவு எப்போதும்
முத்தங்களை நோக்கியதாகவே இருக்கிறது.
அதனால்தான் அடிக்கடி உன்னுடன்
கோபம் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது.

உன் கோபங்களோடுதான்
எனக்கு திருமணம் என்றவுடன்,
அந்த கோபத்தை தூக்கி எறிந்துவிட்டு,
என்னை தவிர நீ வேறு யாரையும் திருமணம்
செய்து கொள்ள கூடாது என்று என்னை
இறுக்கி அணைத்து கொள்கிறாய்.
Chooooo.... Chweeeeet....

ஆனாலும் உன்னைவிட உன்
கோபங்களைதான் எனக்கு பிடித்திருக்கிறது,
காரணம் அவைதானே உன் முத்த சாலைக்கு
என்னை வழி நடத்தி செல்கின்றன

இதோ உன்னுடன் அடுத்த
சண்டைக்கு தயாராகி விட்டேன்.
பின் என்ன? யாரைக் கேட்டு உன்
பக்கத்து வீட்டுக் குழந்தையை
தூக்கி கொஞ்சினாய்?

எனக்கு மட்டுமே சொந்தமான
உன் முத்தங்களை அதற்கு
பரிசாகவும் தருகிறாயே?
இது நியாயமா சொல்..
அப்பாடி சண்டைக்கு ஒரு காரணம்
கிடைத்து விட்டது. இது போதும்...

எனக்கு சொந்தமான ஒன்றை மற்றவர்கள்
பயன்படுத்தினால் எனக்கு பிடிக்காது.
அதனால்தான் உன் ஆடைகளின் மீது கூட
ஆத்திரம் எனக்கு...

என்னுடன்தான் கோபம் உனக்கு..
என்ன பாவம் செய்தன என் செல்ஃபோன்?
உன் SMS இன்றி செத்துப் போய்விட்டது
என் இன்பாக்ஸ்.
உன் குரல் கேட்காமல்
என் வோடாஃபோனின் நாய்க்குட்டி
கூட தொலைந்து போய் விட்டது.

தயவு செய்து எவ்வளவு வேண்டுமானாலும்
என்னிடம் சண்டையிடு...
ஆனால் பேசாமல் மட்டும் இருக்காதே
உன்னுடன் பேசா நாட்களில்
என் நாட்காட்டி வேலை நிறுத்தம் செய்கிறது.

உன்னுடன் பேசிவிட்டு
உடனே மறந்துவிடுகின்றேன். ஆனால்,
உன்னுடன் கோபம் கொள்ளும் நேரங்களில்
நாள் முழுவதும் உன்னையே
நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
அதனால்தான் என்னவோ உன்
கோபங்களை மிக ரசிக்கிறேன்.

உன் சண்டையின் நீட்சியான
சமாதானங்கள் எப்போதுமே
சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கிறது.

என்னுடன் சண்டையிட்டு விட்டாய்,
இனி தயாராய் இரு, முத்த சமாதானங்களோடு...
அவ்வளவு சீக்கிரம் சமாதானம்
அடைந்து விடுபவள் இல்லை நான்
Title: Re: உன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.
Post by: RemO on December 30, 2011, 12:49:25 PM
super ah iruku angel :D
nala love
Title: Re: உன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.
Post by: Dong லீ on December 31, 2011, 05:05:04 PM
என்னுடன் சண்டையிட்டு விட்டாய்,
இனி தயாராய் இரு, முத்த சமாதானங்களோடு...
அவ்வளவு சீக்கிரம் சமாதானம்
அடைந்து விடுபவள் இல்லை நான்

இதை விட  சிறப்பாக காதலை சொல்ல முடியாது  ;)



Title: Re: உன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.
Post by: Global Angel on January 01, 2012, 09:49:38 PM
hahaha apdiyaa machaan  ;)