FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 03, 2015, 10:08:16 PM

Title: ~ சிவப்பு அரிசி தோசை ~
Post by: MysteRy on September 03, 2015, 10:08:16 PM
சிவப்பு அரிசி தோசை

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/11947589_1492345187729618_1481179263297995437_n.jpg?oh=a244340c2ce837142543f56313de881a&oe=5665C3E1)

தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி - ஒரு கப்,
உளுந்து - கால் கப்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து - வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும்.

• பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு போட்டுக் கலக்கவும். பிறகு இந்த மாவை 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

• தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதை புதினா சட்னியுடன் பரிமாறவும்.