FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 03, 2015, 09:35:57 PM
-
ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpl1/v/t1.0-9/11987169_1492344424396361_550979576275099058_n.jpg?oh=6fd1dce5cb56f952c610ae162d0c1a0e&oe=567D67C7&__gda__=1451061835_f61cd007d20c2486e0f81107fdf553e2)
மீன் - 8 (வங்கவராசி அல்லது வாவல் மீன் போன்ற ஏதாவது பொதுவான மீன்)
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு...
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை துண்டுகளாக்கி நன்கு கழுவி, பின் அதன் மேல் உப்பை தடவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மசாலாவை மீன் துண்டுகளின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை ரெடி!!!