FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on December 28, 2011, 09:50:34 PM

Title: ஓய்வு கேட்க்கும் கனவு!
Post by: Yousuf on December 28, 2011, 09:50:34 PM
கனவுக்கும் உணர்வுண்டு
கண்களைவிட்டுச் செல்லாதே!

காண்பதெல்லாம் கனவென்று
கண்களும் சொல்லாதே!

விழிகள் விழித்திருக்க
வெருங்கனவு காணாதே!

வெளிச்சத்தை விட்டு விட்டு
வேறொரு இருளுக்குள் போகாதே!

கனவுகள் மெய்படும்வரை
காட்சிகளும் நகராதே!

கனவுகள் தேயும்வரை
கருவிழியும் சடைக்காதே!

காலங்கள் தீரும்வரை
கனவுகள் ஓயாதே!

கனவுகளும் ஓயாதே
கல்லரைக்கு போகும்வரை.........


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
Title: Re: ஓய்வு கேட்க்கும் கனவு!
Post by: RemO on December 30, 2011, 12:54:22 PM
kanavu na thoongurapa varathila thoogavidama irukurathunu kalam solirukaaru athaiyum inga solanum mams :D ila na namaluga vera kanavula irupanga
Title: Re: ஓய்வு கேட்க்கும் கனவு!
Post by: Yousuf on December 30, 2011, 03:03:15 PM
Ha ha mams ! unmaithaan ;D