FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on December 28, 2011, 09:44:47 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.thoothuonline.com%2Fwp-content%2Fuploads%2F2011%2F12%2Fsunlight-270x170.jpg&hash=83b4060848b11e94a902f6832d2004b8c883ccc4)
லண்டன்:சூரிய ஒளி உடலில் நன்றாக படும் நபர்களுக்கு அம்மை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. நன்றாக சூரிய ஒளிபடும் பகுதிகளில் மனிதர்களை அம்மை நோய் தாக்குவது குறைவு எனஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளியில் அடங்கியுள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் அம்மை நோய்க் கிருமிகளை அழிப்பதுதான் இதற்கு காரணம் என ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த டாக்டர்.ஃபில்ரைஸ் கூறுகிறார். சிக்கன் பாக்ஸ் என்று அழைக்கப்படும் அம்மை நோய் குளிர் காலங்களில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அம்மை நோய் பரவுவதற்கு காரணம் இதுவேயாகும் என அவர் கூறுகிறார்.
பல நாடுகளில் நடந்த 25 ஆய்வு அறிக்கைகளை விரிவாக பரிசோதித்து ஆராய்ச்சியாளர்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனர். மருத்துவ இதழான வைரோலஜி பத்திரிகையில் இந்த புதிய கண்டுபிடிப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
-
அப்டி பார்த்தா ஆசிய நாடுகளுக்கு அம்மை நோய் வரவே வராதே .. ஆனா அங்கதானே நிறைய வருது