FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on September 02, 2015, 05:29:22 AM

Title: கனா கண்டேனடி - தோழி
Post by: SweeTie on September 02, 2015, 05:29:22 AM
ஓங்கி வளர்ந்த மூங்கில் மரங்களூடு
உரசி உறவாடிஇன்னிசை பாடிவரும்   தென்றல்
தீண்டிய நொடிகளில், சுகமதில்
மயங்கிய நல்லாள், இனியவள், கார்குழலாள்
பற்றிய கரம்தனில் தம் கரம்கள் பின்னிட,
சிற்றிடை அசைந்திட, நாணமுடன் நடை பயின்று
நம்பியவன் தோழ்மேல் தலை சாய்த்து
கொஞ்சியும், கெஞ்சியும் கிள்ளை மொழி பேசி,
அவன்  ஈர்க்கை வென்றிட சரசங்கள் பரிமாறி   
இனியவன் மனம் கவர்ந்து
ஊடலும் கூடலும் இணையப் பகிர்ந்து
இதழோடு இதழ்  பதித்து
'இச்'  எனச் சத்தமிட்டு முத்தமிட
கண் விழித்தேனடி  தோழி 
Title: Re: கனா கண்டேனடி - தோழி
Post by: NiThiLa on September 02, 2015, 09:20:08 AM
மிக அருமை தோழி உங்கள் சொற் பிரயோகம் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
Title: Re: கனா கண்டேனடி - தோழி
Post by: gab on September 02, 2015, 08:25:08 PM
கனவு ,கனவை கவியாக வடித்த விதம்இவை இரண்டும் அருமை  . தொடரட்டும் பதிவுகள் .உங்களின் கனவுகளை மேலும் பொதுமன்றத்தில் எதிர் பார்க்கும் வாசகன். 
Title: Re: கனா கண்டேனடி - தோழி
Post by: JoKe GuY on September 03, 2015, 12:30:06 AM
மேலும் கனவு காணுங்கள்.வளரட்டும்  உங்களின் கவிதைகள்
Title: Re: கனா கண்டேனடி - தோழி
Post by: Dong லீ on September 03, 2015, 01:23:22 AM
கனவின் ஊடாக  மிகவும் லாவகமாய் 
"நல்லாள், இனியவள், கார்குழலாள்"  உங்களின் நற்பண்புகளை எடுத்து கூறியிருக்கும் விதம் அருமை ..வாழ்த்துக்கள் .தமிழ் ஆர்வம் வளரட்டும்
Title: Re: கனா கண்டேனடி - தோழி
Post by: SweeTie on September 13, 2015, 05:15:04 PM
நன்றிகள் தோழி நித்திலா, தோழர்கள்  Gab , Jokeguy   Dong Lee ,  எங்கள் வளர்ச்சி உங்கள்  வாழ்த்துக்களில் ,,,,,,,