FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiThiLa on September 01, 2015, 10:25:49 AM
-
வாழ்வில் சிறக்க
விதையின் வீரியம்
வேரின் உறுதி
தண்டின் நிமிர்வு
இலை போல ஊழைப்பு
பூ போல மனம்
காய் அளவு பயன்
கனி போல இனிமை
இவை எல்லாம் வேண்டும் வாழ்வில் சிறக்க
இதய களவாணி
உன் விரல் பிடித்து
உன் அடி தொடர்ந்து
உன் தோள் சாய்ந்து
உன்னோடு
உனக்காக உருகி
உனக்காக மருகி
உன்னை காணும் பொழுதில் மலர்ந்து
உயிர் மூச்சு உள்ள வரை வாழ
உன் விரல் பிடித்து
என் இதயம் கோர்த்து
என்னுள்
எனக்காக
என்னுடன் வாழ வருவாயா
என் இதயம் களாவடியவனே
வேண்டும் என்று வேண்டுகிறேன்
தெளிவான சிந்தனை
நடு நிலையான மனது
குன்றாத தன்னம்பிக்கை
வெற்றியளிக்கும் வாய்ப்புகள்
நியாயமான அவா
சரியான செயல்கள்
இனிமையான குணம்
பகுத்தறிவு
ஈகை பண்பு
இவை அனைத்திற்கும் மேல்
தாய் தந்தை மேல் குறையாத பக்தி
இவை எல்லாம் வேண்டும் என்று வேண்டுகிறேன்
தினமும் அந்த பேரருளானிடம்
தாய் அன்பு
தாய் இவள் அன்புக்கு
ஆதியும் இல்லை
அந்தமும் இல்லை
அகிலத்தையே
மயங்க வைக்கும்
அவள் அன்பு எனும்இசை
பத்து மாதம் சுமந்து
பத்தியமாய் உணவு உண்டு
சுய விருப்பத்தை தியாகம் செய்து
வலி பொறுத்து வழி தருகிறாள்
இந்த உலகத்திற்கு வர
பசித்த போது பாலுட்டி
பயந்த போது உறுதிகொடுத்து
மெத்தையாய் மடி தாங்கி
பண்போடு ஆளாக்கி
புதிராகும் சூழ்நிலையில்
புரிய வைத்து
பழுதில்லா பழமையை
பயிர் செய்து
பார் போற்றும் குணங்களோடு
பார்ப்போர் வியக்கும் படி
உருவாக்கி
எத்தனை வளர்ந்தாலும்
பார்வையிலேயே என்னை பதித்து விடும்
அவளுக்கு இணை
இது வரை இல்லை இந்த ஜகத்திலே
பின் குறிப்பு:
பிழை இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்
-
உங்களின் கவிதை பூங்கா மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs30.postimg.org%2Fx94e7aldp%2Farumai.jpg&hash=a61844ca0263b2ed598d35b1198b6e626a752aad) (http://postimg.org/image/x94e7aldp/)
-
உங்கள் கவிதைகள் தொடர்ந்து மிளிர வாழ்த்துக்கள் நித்திலா.